Thursday, March 15, 2018

சீப்பு சீடை | seepu seedai

தேவையான பொருட்கள்:
பச்சரிசி  மாவு 4கப்
உளுந்து  மாவு 1.5கப்
தேங்காய் 1
எண்ணெய் 1லிட்டர்
உப்பு

மாவு தயாரிக்கும் முறை:
பச்சரிசி மாவு :
பச்சரிசியை தண்ணீரில்  1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் நீரை நன்றாக வடித்து விட்டு, அதனை மிக்ஸியில் போட்டு மிக மென்மையாக அரைத்து, சல்லடை கொண்டு சலிக்கவும்.
பின் ஒரு கடாயில் அரைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து வறுக்கவும். பின் மீண்டும் ஒரு முறை வறுத்த மாவை மிக்ஸியில் போட்டு அரைத்து , சலித்து எடுக்கவும்.

உளுந்து மாவு:
உளுந்தை ஒரு கடாயில் போட்டு நன்கு வெதுப்பவும். பின் மிக்ஸியில் போட்டு மென்ரைமையாக அரைத்து பிசிறில்லாமல் சலித்து வைக்கவும்.

செய்முறை:

தேங்காயைத் திருகி பால் எடுத்து கொள்ளவும்.


பச்சரிசி மாவு மற்றும் உளுந்து மாவு இரண்டையும் ஒரு மாவு பிசையும் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு இதனுடன் உப்பு மற்றும் தேங்காய் பால் ஊற்றி நன்கு பிசையவும்.
மாவு ஒட்டாமல் இருக்க கைகளில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து கொள்ளவும்.

இப்போது சீப்பு சீடை பிழியும் கட்டையில் மாவை எடுத்து கொண்டு கீழே படத்தில் உள்ளவாறு நேர் நேராக பிழியவும்.


பின் கத்தி அல்லது சிறு கம்பி தகடு கொண்டு ஒரே அளவாக மாவை வெட்ட வேண்டும்.

பின் வெட்டிய ஒவ்வொரு துண்டையும் ஆட்காட்டி விரலில் சுற்றி மாவு துண்டின் இரு முனைகளையும் சேர்த்து ஒட்டவும்.

இப்போது எண்ணெயை நன்கு காய வைத்து ஒட்டிய சீப்பு சீடைகளை எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

இப்போது குழந்தைகளுக்கு சத்தான சீப்பு சீடை தயார். இதை காற்று புகாத டப்பாக்களில் சேமித்து வைக்கவும்.

குறிப்பு:
பச்சரிசி மாவு மற்றம் உளுந்து மாவு இரண்டையும் தயார் செய்து வைத்து கொண்டால் தேவையான போது உடனடியாக சீடைகளை தயார் செய்யலாம்.
 





Monday, March 5, 2018

புடலங்காய் கூட்டு

தேவையான‌ பொருட்கள்:
  1. புடலங்காய் 1கப் 
  2. வெங்காயம் 1 
  3. தக்காளி 1/2 
  4. பச்சைமிளகாய் 1 
  5. பாசிப்பருப்பு 4tbls
  6. கடலை பருப்பு(சன்னா தால்) 2tbls 
  7. தேங்காய் துறுவல்
  8. கொத்தமல்லி தழை 
  9. நெய் 
தாளிக்க:
  1. எண்ணெய் 
  2. கடுகு 
  3. சீரகம் 
  4. கறிவேப்பிலை 
  5. வரமிளகாய் 1  
செய்முறை:
  • ஒரு குக்கரில் பாசிப்பருப்பையும், கடலை பருப்பையும் வேக வைத்து கொள்ளவும்.
  • தேங்காயை திருகி பால் எடுத்து கொள்ளவும்.
  •  புடலங்காய், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சைமிளகாய் இவை அனைத்தையும் குக்கரில் 2 விசில் விடவும். 
  • அடுப்பை மிதமான தீயில் குறைத்து கொண்டு, வேக வைத்த பருப்பை சேர்த்து கிண்டவும். 
  • நீர் முழுவதும் வற்றியவுடன் தேங்காய் பாலை சேர்க்கவும். 
  • ஒரு கடாயில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு நன்கு காய்ந்த்தும் அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.      

Friday, February 23, 2018

ZUCCHINI CHUTNEY




தேவையான‌ பொருட்கள்:
  1. வெங்காயம் 2 
  2. சீமை சுரைக்காய் (Zucchini) 2
  3. தக்காளி 1 
  4. வரமிளகாய் 3 
  5. கடுகு மற்றும் உளுந்தம்பருப்பு 
  6. கறிவேப்பிலை 
  7. எண்ணெய் 
தாளிக்க:
  1. கடுகு மற்றும்  உளுத்தம் பருப்பு
  2. கறிவேப்பிலை
  3. எண்ணெய்  
செய்முறை:
  • முதலில் ஒரு கடாயில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்த்தும் அதில் கடுகு, வரமிளகாய் போட்டு மிளகாய் சிவக்க விட்டு பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதனுடன் நறுக்கிய சீமை சுரைக்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும் .
  • அடுத்து தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொ்ள்ளவும்.
  • ஒரு கடாயில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு நன்கு காய்ந்த்தும் அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

Thursday, February 8, 2018

பாதம் அல்வா | ALMOND HALWA



தேவையான‌ பொருட்கள்:
  1. பாதம் பருப்பு 1கப் 
  2. முந்திரி பருப்பு 10
  3. பால் 4கப் 
  4. குங்குமப்பூ சிறிதளவு
  5. நெய் 2கப் 
  6. சக்கரை 2கப்
செய்முறை:
  1. பாதம் பருப்பை 8 மணிநேரம் ஊற வைத்து தோல் நீக்கி கொள்ளவும். அல்லது கொதிக்க வைத்த சுடுநீரில் பாதாம் பருப்பை அரை மணி ஊற வைத்து தோல் நீக்கி கொள்ளவும்.
  2. முதலில் 3கப் பாலை காய்ச்சி அதனுடன் குங்குமப்பூ சேர்த்து வைக்கவும்.
  3. மீதமுள்ள 1கப் பாலை காயவைத்து முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்புடன் சேர்த்து அரைத்து கொள்ளவும். 
  4. இப்போது ஒரு கனமான பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு அரைத்த கலவையைச் சேர்த்து அடுப்பில் வைத்து 2நிமிடம் கிண்டவும். 
  5. பின் சக்கரை மற்றும் காய்ச்சிய பாலை ஊற்றி அடிபிடிக்காமல் நன்கு கிண்டி கொண்டே இருக்க வெண்டும். 
  6. சிறிது நேரத்தில் பால் முழுவதும் வற்றிவுடன் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி கைவிடாமல் கிண்டவும்.
  7. சிறிது நேரத்தில் ஊற்றிய நெய் அனைத்தும் குமிழியாக வெளிவர தொடங்கும்.
  8. நெய்யை வடித்து விடவும்.
  9.  இப்போது சுவையான பாதம் அல்வா தயார் :)

வெண்டைக்காய் மசாலா | OGRA MASALA | VENDAIKKAI MASALA


தேவையான‌ பொருட்கள்:

  1. வெண்டைக்காய் 1/2 கிலோ
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. கறிவேப்பிலை
  5. மிளகாய் தூள் 4tbs
  6. சோம்பு
  7. பட்டை
  8. எண்ணெய்

செய்முறை:

  • முதலில் ஒரு கடாயில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு நன்கு காய்ந்த்தும் அதில் வெண்டைக்காயுடன் சிறிது உப்பு சேர்த்து அதன் பிசுபிசுப்பு  போக  வதக்கி தனியே வைத்து கொள்ளவும்.
  • பின் கடாயை சுத்தம் செய்து விட்டு,அதில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு பட்டை , சோம்பு போட்டு, பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து 2நிமிடம் வதக்கி விட்டு,அதனுடன் மிளகாய் தூள், உப்பு மற்றும் நீர் விட்டு மிளகாய் தூள் வாசனை போக மசாலவை கொதிக்க விடவும்.
  • வதக்கிய வெண்டைக்காயை மசாலாவுடன் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2நிமிடம் கிண்டி பின் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.