தேவையான பொருட்கள்:
- வெங்காயம் 2
- சீமை சுரைக்காய் (Zucchini) 2
- தக்காளி 1
- வரமிளகாய் 3
- கடுகு மற்றும் உளுந்தம்பருப்பு
- கறிவேப்பிலை
- எண்ணெய்
தாளிக்க:
- கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு
- கறிவேப்பிலை
- எண்ணெய்
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்த்தும் அதில் கடுகு, வரமிளகாய் போட்டு
மிளகாய் சிவக்க விட்டு பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதனுடன் நறுக்கிய சீமை சுரைக்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும் .
- அடுத்து தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொ்ள்ளவும்.
- ஒரு கடாயில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு நன்கு காய்ந்த்தும் அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
தேவையான பொருட்கள்:
- பாதம் பருப்பு 1கப்
- முந்திரி பருப்பு 10
- பால் 4கப்
- குங்குமப்பூ சிறிதளவு
- நெய் 2கப்
- சக்கரை 2கப்
செய்முறை:
- பாதம் பருப்பை 8 மணிநேரம் ஊற வைத்து தோல் நீக்கி கொள்ளவும். அல்லது கொதிக்க வைத்த சுடுநீரில் பாதாம் பருப்பை அரை மணி ஊற வைத்து தோல் நீக்கி கொள்ளவும்.
- முதலில் 3கப் பாலை காய்ச்சி அதனுடன் குங்குமப்பூ சேர்த்து வைக்கவும்.
- மீதமுள்ள 1கப் பாலை காயவைத்து முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்புடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- இப்போது ஒரு கனமான பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு அரைத்த கலவையைச் சேர்த்து அடுப்பில் வைத்து 2நிமிடம் கிண்டவும்.
- பின் சக்கரை மற்றும் காய்ச்சிய பாலை ஊற்றி அடிபிடிக்காமல் நன்கு கிண்டி கொண்டே இருக்க வெண்டும்.
- சிறிது நேரத்தில் பால் முழுவதும் வற்றிவுடன் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி கைவிடாமல் கிண்டவும்.
- சிறிது நேரத்தில் ஊற்றிய நெய் அனைத்தும் குமிழியாக வெளிவர தொடங்கும்.
- நெய்யை வடித்து விடவும்.
- இப்போது சுவையான பாதம் அல்வா தயார் :)
தேவையான பொருட்கள்:
- வெண்டைக்காய் 1/2 கிலோ
- வெங்காயம் 1
- தக்காளி 1
- கறிவேப்பிலை
- மிளகாய் தூள் 4tbs
- சோம்பு
- பட்டை
- எண்ணெய்
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு நன்கு காய்ந்த்தும் அதில் வெண்டைக்காயுடன் சிறிது உப்பு சேர்த்து அதன் பிசுபிசுப்பு போக வதக்கி தனியே வைத்து கொள்ளவும்.
- பின் கடாயை சுத்தம் செய்து விட்டு,அதில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு பட்டை , சோம்பு போட்டு, பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து 2நிமிடம் வதக்கி விட்டு,அதனுடன் மிளகாய் தூள், உப்பு மற்றும் நீர் விட்டு மிளகாய் தூள் வாசனை போக மசாலவை கொதிக்க விடவும்.
- வதக்கிய வெண்டைக்காயை மசாலாவுடன் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2நிமிடம் கிண்டி பின் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.