- பாதம் பருப்பு 1கப்
- முந்திரி பருப்பு 10
- பால் 4கப்
- குங்குமப்பூ சிறிதளவு
- நெய் 2கப்
- சக்கரை 2கப்
செய்முறை:
- பாதம் பருப்பை 8 மணிநேரம் ஊற வைத்து தோல் நீக்கி கொள்ளவும். அல்லது கொதிக்க வைத்த சுடுநீரில் பாதாம் பருப்பை அரை மணி ஊற வைத்து தோல் நீக்கி கொள்ளவும்.
- முதலில் 3கப் பாலை காய்ச்சி அதனுடன் குங்குமப்பூ சேர்த்து வைக்கவும்.
- மீதமுள்ள 1கப் பாலை காயவைத்து முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்புடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- இப்போது ஒரு கனமான பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு அரைத்த கலவையைச் சேர்த்து அடுப்பில் வைத்து 2நிமிடம் கிண்டவும்.
- பின் சக்கரை மற்றும் காய்ச்சிய பாலை ஊற்றி அடிபிடிக்காமல் நன்கு கிண்டி கொண்டே இருக்க வெண்டும்.
- சிறிது நேரத்தில் பால் முழுவதும் வற்றிவுடன் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி கைவிடாமல் கிண்டவும்.
- சிறிது நேரத்தில் ஊற்றிய நெய் அனைத்தும் குமிழியாக வெளிவர தொடங்கும்.
- நெய்யை வடித்து விடவும்.
- இப்போது சுவையான பாதம் அல்வா தயார் :)

No comments:
Post a Comment